தமது உரிமைகளை வெல்வதற்காக, அரசியலமைப்பின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பயன்படுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு சிரேஷ்ட அழைப்பு விடுத்துள்ளனர்.
கொழும்பில் இன்று ( 6) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் இணைந்து இக்கோரிக்கையை முன் வைத்தனர்.
‘ ஜூலை 9 – முற்பகல் 9.00 மணி – கொழும்பு ‘ எனும் தொனிப் பொருளில் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஸ்ரீநாத் பெரேரா, சரத் ஜயமான்ன, உபுல் ஜயசூரிய உள்ளிட்டோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும, நுவன் போப்பகே உள்ளிட்ட சட்டத்தரணிகலும் ஊடகங்கள் முன் கருத்து வெளியிட்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் போபகே, ‘அவர்கள் அவர்களுடைய அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இப்போது நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும் ‘ என தெரிவித்தார்.
