கொழும்பு காலி முகத்திடல் கோட்டா கோ கம தன்னெழுச்சி போராட்டகாரர்களை இராணுவம் கொண்டு அடித்து,ஒடுக்கிய சம்பவத்தின் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.
அவர் யாரை திருப்பதிப்படுத்துவதற்காக அதனை செய்தார் என்பது தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நீதிமன்றில் கோரினார்.
காலி முகத்திடல் போராட்டகாரர்களை ஒடுக்க இராணுவத்தை பயன்படுத்திய போது பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கைது செய்யப்பட்ட 9 பேரை நேற்று (22) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்த போது அவர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
