Our Feeds


Friday, July 8, 2022

SHAHNI RAMEES

நெருக்கடிக்கு மத்தியில் பொதுப்போக்குவரத்து சேவைகளின் சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருள்

வழங்காவிட்டால், பணியிலிருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று காலை போக்குவரத்து சபை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருள் வழங்கவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டால், இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பணியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதை நோக்காக் கொண்டு போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் நீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், முன் அறிவித்தல் இன்றி புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »