Our Feeds


Thursday, July 7, 2022

SHAHNI RAMEES

BREAKING: மீண்டும் அவசரகால சட்டம் அமுலாகுமா?

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நாளை மறுதினம் நடத்தப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, நாடு முழுவதும் அவசர சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லியனகே உள்ளிட்டோருடன் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படாத போதிலும், எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »