Our Feeds


Tuesday, July 19, 2022

SHAHNI RAMEES

JUST_IN: அவசரகாலச் சட்ட விதிகள் குறித்த அறிவிப்பு..!

 

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் அவசரகாலச் சட்ட விதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவசரகாலச் சட்டங்கள் பொது அத்தியாவசிய சேவைகள், நுழைவு உரிமை, தேடுதல் மற்றும் கைது செய்யும் உரிமை, குற்றங்கள் மற்றும் தண்டனைகள், விசாரணைகள் மற்றும் சோதனைகள் மற்றும் இதர விபரங்கள் தொடர்பான ஏழு பகுதிகள் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் நேற்று பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் நேற்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »