(இராஜதுரை ஹஷான்)
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தம்மிடம் உள்ளது என்ற தைரியத்தில் தன்னிச்சையாக செயற்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின் போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை மாறாக அரசியல் காரணிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட்டது.
கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என அறிவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கப்பட்ட போதும் அதற்கு மதிப்பளிக்கப்படாமல் அரசியல் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படாத காரணத்தினால் முஸ்லிம் சமூகத்தினரதும், முஸ்லிம் நாடுகளினதும் அதிருப்தியை பெற்றுக்கொள்ள நேரிட்டது.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்க்ஷவுக்கு நிதியமைச்சு பதவி வழங்கப்பட்டது.பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமையற்ற அவருக்கு நிதியமைச்சு பதவியை வழங்க வேண்டாம் என பலமுறை எடுத்துரைத்தும் அது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை. தவறான பொருளாதார மற்றும் நிதி முகாமைத்துவம் முழு பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியது என்றார்.
