Our Feeds


Wednesday, August 31, 2022

SHAHNI RAMEES

மலேசியா சுற்றுலா விசா மோசடி - 5 ஆண்டு சிறை : மக்களே அவதானம்..!

 

மலேசியாவுக்கான சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி அந்நாட்டில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொள்ளும் மோசடி தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலேசியாவிற்கு வருகை தந்தவுடன் வேலை விசாவாக அங்கீகரிக்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எவ்வாறாயினும், இது ஒரு மோசடி மற்றும் சில குற்றவாளிகளால் நடத்தப்படும் நிதி மோசடி என்று தெரியவந்துள்ளது.

எந்தவொரு நாட்டிற்கும் சுற்றுலா விசாக்கள் எந்த நாட்டிலும் வேலை விசாவாகவோ அல்லது அனுமதிப்பத்திரமாகவோ அங்கீகரிக்கப்படாது என்றும், அது அங்கீகரிக்கப்படாது என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசடிகளுக்கு சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். 

இவ்வாறான விசா மோசடிகள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 119, 118 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »