வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஹெரோயின் வழங்குவதற்கு கொண்டு வந்த 70 வயதான அவரது தாயை ஹோமாகம பொலிஸார் நேற்று (23) கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண்ணின் மகன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி விட்டு தப்பியோடியபோது மாடிக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவில் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையிலேயே அவரது தாயார் நேற்று முன்தினம் 23ம் திகதி மாலை, நோயாளர்களைப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனைப் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளார்.
இதன்போதே அவர் தனது மகனுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த உணவுப் பார்சலுக்கு போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
