Our Feeds


Monday, August 1, 2022

SHAHNI RAMEES

படகு பழுதாகி தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர்: மீனவர்கள் நன்றி ‍தெரிவிப்பு..!

 

படகு பழுதாகியதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் மீட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் 6 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த படகு நேற்றுமுன்தினம் இரவு தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்றது. இதன் இடையே நேற்று காலை வரை இந்த படகு மற்றும் மீனவர்கள் கரை திரும்பாததால் இந்த மீனவர்களை தேடி ஒரு படகில் 5 மீனவர்கள் தேடி சென்றனர்.



அப்போது பழுதாகி நின்ற இராமேசுவரத்தை சேர்ந்த படகு மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் கயிறு கட்டி இழுத்து வந்து தேடிச் சென்ற இராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்” என மாலைமலர் தெரிவித்துள்ளது.

பின்னர் பழுதாகி நின்ற படகு மற்றும் 6 மீனவர்களையும் தேடி சென்ற மீனவர்கள் மீட்டு நேற்று மாலை கரைக்கு அழைத்து வந்தனர். இதுபற்றி படகு உரிமையாளர் சேகர்பாண்டி கூறுகையில், “தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதாகி இந்திய கடல் பகுதிக்குள் நின்றது.



கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் படகானது இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. நேற்று அதிகாலை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகு மற்றும் மீனவர்களை மீட்டு பாதுகாப்பாக இராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.



மனிதாபிமானத்துடன் 6 மீனவர்களை காப்பாற்றி படகுடன் திருப்பி அனுப்பி வைத்த இலங்கை கடற்படைக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் நின்ற இராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை படகுடன் மீட்டு இலங்கை கடற்படை திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் இராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக் கடற்படையினர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“ஜூலை 31 ஆம் திகதி காலை தலைமன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட (பதிவு இலக்கம் IND/TN/10/MM/ 1032) மீன்பிடிப்படகு ஒன்றை இலங்கை கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ். ரணஜய (SLNS Ranajaya ) அவதானித்தது.



இப்படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இலங்கை கடற்பரப்புக்குள் அடித்து வரப்பட்டுள்ளது என்பது தெரியந்தது.

அதையடுத்து 6 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டதுடன் அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மனிதாபிமான உதவிகைள வழங்கினர்.
பின்னர் சர்வதேச கடல் எல்லையில் வை;து மற்றொரு இந்திய மீன்பிடிப் படகிகடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »