இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்
ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இன்று (08) கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.பாடசாலையின் கல்விய செயற்பாடுகள் நிறைவடைந்ததும் பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இந்த வாரமும் மூன்று நாட்கள் நடைபெறும்.
அதன்படி இன்றும் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.