Our Feeds


Friday, August 12, 2022

SHAHNI RAMEES

பாகிஸ்தானின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.!

 

பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்கு கராச்சி செல்லும் வழியில், சீனாவில் தயாரிக்கப்ட்ட பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணைப் போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியது.

எனினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு  அனுமதி மறுத்துள்ளது.

சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது.

ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தமது  முதல் பயணத்தை மேற்கொள்கிறது.

கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு  துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வந்துள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சீனாவின் கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு வரும் பயணம் இந்தியாவின் எதிர்ப்பால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »