Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

ஜனாஸாக்களை எரித்து முஸ்லிம் நாடுகளை பகைத்துக் கொண்டதுதான் கோட்டா செய்த பெரும் பிழை - போட்டுடைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

 

சீன இராணுவ கப்பலுக்கு தடை விதித்து,பாகிஸ்தான் இராணுவ கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளமை வெளிவிவகார கொள்கையின் பிரித்தாளும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. தவறான வெளிவிவகார கொள்கையை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும். சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானவை. சர்வதேச உறவை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று (10) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.




அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை போன்று சீனாவும் இலங்கைக்கு முக்கியமான பிறிதொரு நாடாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் சீனா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்தியா ,சீனா ஆகிய இரு நாடுகளும் இலங்கைக்கு முக்கியமானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ பதவி வகித்த காலத்தில் அவர் ஒரு முறை கூட யாழ்ப்பாணத்துக்கு அரச தலைவர் என்ற ரீதியில் விஜயத்தை மேற்கொள்ளவில்லை.இதனால் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆர்வம் காட்டவில்லை. மறுபுறம் கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமையால் முஸ்லிம் நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிட்டுள்ளது.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »