Our Feeds


Saturday, August 27, 2022

SHAHNI RAMEES

அஹ்னாப் ஜஸீம் விவகாரம்: வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு திகதி குறித்தது புத்தளம் மேல் நீதிமன்றம்..!

 

‘நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்பிலான வழக்கை, ‘வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு ‘ ( pre trial ) திகதி குறித்து புத்தளம் மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு அதனை ஒத்தி வைத்தது.

புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட இதற்கான உத்தரவை நேற்று (26)பிறப்பித்தார்.




இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி உதார கருணாரத்ன ஆஜரானதுடன், பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான சஜாத் மற்றும் ஹுஸ்னி ரஜித் ஆகியோர் ஆஜராகினர்.

அத்துடன் சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »