Our Feeds


Saturday, August 13, 2022

SHAHNI RAMEES

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு..!

 

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் இறப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் 100 % இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது.

இதனையடுத்து, களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை கடந்த 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »