Our Feeds


Wednesday, August 17, 2022

ShortTalk

அறுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த திருட்டு மாடுகள் மீட்பு



மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் திருடப்பட்டு இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் நேற்று (16) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


வவுணதீவு பிரதேசத்திலுள்ள சின்னகாலபோட்டமடு பகுதியில் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் திருடிச்சென்று மாட்டு வியாபாரிக்கு குறைந்த விலைக்கு விற்றுள்ளார்.

இம்மாடுகளை காத்தான்குடி பகுதியில் அறுவைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்கே தலையிலான பொலிஸாரின் நடவடிக்கையினால் மீட்கப்பட்ட மாடுகளுடன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாடுகளையும் ஐந்து சந்தேக நபர்களையும் இன்று (17) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனை நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »