Our Feeds


Sunday, August 21, 2022

SHAHNI RAMEES

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீர் கட்டணம் அதிகரிப்பின் போது சலுகை


 அதிகரிக்கப்படுகின்ற நீர் கட்டணத்தை, வருவாய் திறனுக்கு ஏற்பட அறவிடுவிதற்கு புதிய திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


அண்மையில் நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக யோசனையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரைவையில் முன்வைத்தார்.


அந்த யோசனைக்கு தற்போது அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதுடன் அதனை விரைவாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் அதிக வருமானம் பெறும் தரப்பினருக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கும் ஒரு அலகு நீருக்கு ஒரே அளவான கட்டணத்தை செலுத்துகின்றனர்.


அந்த முறைமைக்கு பதிலாக, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகைகள் வழங்கவும், அதிக நீரை பயன்படுத்தும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் கட்டணத்தை அறவிடவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.


இதற்கமைய வீட்டுப்பாவனைக்கான நீர்வசதியை மாத்திரம் பெறுபவர்களின் புதிய நீர்கட்டணங்களின் படி, குறைந்தளவிலேயே கட்டணம் அதிகரிக்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »