Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

BREAKING: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: இருவரை முழுமையாக விடுதலை செய்த நீதிமன்றம்!

 



உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலையடுத்து

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் தள்ளாடி இராணுவ முகாம் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருமாக இருவர் பயங்கர வாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.


தனது உடைமையில் பீரங்கிக்கு பயன்படுத்தும் திரியை வைத்திருந்தார் என்ற அடிப்படையில் பள்ளிமுனையை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு குறித்த பீரங்கி திரியை வழங்கிய குற்ற சாட்டில் தள்ளாடி இராணுவ முகாமை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் கடந்த 2019 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் இருவரையும் விடுவிக்க கோரி அல்லது பொலிஸார் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பணங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு வந்ததுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குப் பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்ததோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.


இருப்பினும் குறித்த வழக்கு காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு நேற்றைய தினம் (4) வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.


இநந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க மன்னார் நீதிவான் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »