புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயர்
அதிகாரி ஒருவருக்கு உண்பதற்கு 42,000 ரூபா செலவில் வெள்ளி கலந்த 6 கரண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகாரி சாப்பிடும் போது பயன்படுத்தும் கரண்டிகள் பழையதாக இருப்பதால், புதிய கரண்டிகளை வாங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பத்தரமுல்லையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டொன்றில் இருந்து 5000 ரூபாவுக்கு ஆறு கரண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவற்றை பரிசோதித்த சம்பந்தப்பட்ட அதிகாரி, அவர்கள் எதிர்பார்த்த நிலையில் இல்லாத காரணத்தினால் தரமான கரண்டிகளை கொண்டு வருமாறு பணித்தார்.
பின்னர், 6 கரண்டிகளை மீண்டும் கொண்டு வந்த அதிகாரிகள், வெள்ளி கலந்ததாக கூறப்படும் ஆறு கரண்டிகளின் விலை 42,000 ரூபா என தெரிவித்தனர்.
