2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின்
இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதுவரையில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 11முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள இலங்கை அணி 5 முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.
1986,1997,2004,2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றால் 6ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை இலங்கை அணி பெற்றுக்கொள்ளும்.
அத்துடன், பாகிஸ்தான் அணி இதுவரையில் இரண்டு முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.
1997 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்நிலையில், இம்முறை பாகிஸ்தான் அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றால் 3ஆவது முறையாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுக்கொள்ளும்.
