Our Feeds


Friday, September 16, 2022

SHAHNI RAMEES

சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


 சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இது இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சு பதவி கிடைக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.


முன்னதாக, பெரும்பாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.


அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »