Our Feeds


Monday, September 26, 2022

ShortTalk

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவு - இலங்கையில் எரிபொருள் விலை குறையுமா?




உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 78 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 டொலராக குறைவடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் விலை சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், இறுதியாக கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதியே விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதற்கான தீர்மானம் எரிசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »