Our Feeds


Monday, September 26, 2022

ShortTalk

போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா? - PTA எதிர்ப்பு கையெழுத்து சேகரிப்பில் அங்குரங்கெத்தையில் சாணக்கியன் கேள்வி!



சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் என இச்சட்டத்துக்கு பெயர் இருந்தாலும், பயங்கரவாத தடுப்புக்கு எதிராக பயன்படுத்துவதில்லை. மாறாக சாதாரண மக்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள சரத்துகள் பயங்கரமானவை. வழக்கு தொடுக்காமல் பல வருடங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்கலாம், பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைதான ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை நீதிமன்றத்தை சாட்சியாக பயன்படுத்தலாம்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் கையெழுத்து போராட்டத்தை நாம் மார்ச் மாதமே ஆரம்பித்துவிட்டோம். ஏனெனில் இச்சட்டம் மக்கள்மீது பாயும் என்பது எமக்கு தெரியும். தமக்கு விசுவாசமான வியாபாரிகளுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கும்போதே, இந்நாடு வங்குரோத்தடையும் என்பது எமக்கு தெரியும். அந்நிய செலாவணிமீது கைவைத்தபோது, வரிசை யுகம் உருவாகும் என்பதும் தெரியும்.

இதற்கிடையில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தது. நாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ், தண்டிக்கப்படுகின்றனர். வசந்த முதலிகே பயங்கரவாதியா? போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?

உண்மையான பயங்கரவாதிகள் யார்? உரத்தை இல்லாது செய்தது யார், அந்திய செலாவணியை இல்லாது செய்தது யார், வரிசை யுகத்தை உருவாக்கியது யார் , குழந்தைகளுக்கு பால்மாவை இல்லாது செய்தது யார், இவர்களே உண்மையான பயங்கரவாதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »