மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து அரசாங்கத்தில்
உள்ள சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (02) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு உரிய தரப்புகளுக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்கும் சதி தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
