Our Feeds


Sunday, October 2, 2022

SHAHNI RAMEES

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2000 வீடுகள்- ஜனாதிபதி அறிவிப்பு..!


எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைநகரில் மட்டுமன்றி புறநகர்களிலும் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அந்த வீடுகளை வழங்குவதில் “தகுதியானவர்கள்” என்பதை அடையாளம் கண்டு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாளைய தினம் 36 ஆவது உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »