Our Feeds


Saturday, October 22, 2022

ShortTalk

22 இனி 21 என்றே அழைக்கப்படும்: நீதியமைச்சர் கூறும் காரணம் இதுதான்!



அரசியலமைப்புக்கான 22வது திருத்தத்தின் பெயரை 21வது திருத்தம் என மாற்றுவதற்கு குழுநிலையின் போது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று நாடாளுமன்றில நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை 22வது திருத்தம் என்று அழைக்காமல், 21வது திருத்தம் என்று அழைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார 21 வது திருத்தம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு திருத்தத்தை முன்னர் சமர்ப்பித்ததால், அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட திருத்தம் 22 வது திருத்தம் என்று பெயரிடப்பட்டது.


எனவே, நேற்று 22ஆவது திருத்தம் எனும் எனும் பெயரில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான திருத்தம், 21ஆவது திருத்தம் என்றே அழைக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »