Our Feeds


Wednesday, October 19, 2022

ShortNews Admin

50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன..!

 

இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றமையும் குறித்த ஆய்வின் ஊடாக தெரியவந்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏனைய பொருட்களின் விலை 70 வீதத்தாலும் உயர்ந்துள்ளன.

இந்தநிலையில் 50 வீதமான குடும்பங்கள் தமது உணவில் இறைச்சி மற்றும் மீன்களை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 11 வீதமானோர் புரத உணவை முற்றிலும் தவிர்த்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதுடன், கடற்றொழில் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »