நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான போஷாக்கு உணவை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் இதற்கு தேவையான அதிகபட்ச நிதி திறைசேரியில் இருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான தகவல்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
