இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பதற்கும், இந்நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தவும் அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கெப்ரால் உட்பட பலர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.