அமெரிக்காவில் கடற்படையின் மின் பொறியியலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற 72 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டு மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் வசித்து வந்த சித்ரானந்த ஜயரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பதுடன் அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 2019 இல் இலங்கைக்கு வந்துள்ளார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்று இலங்கைக்கு வந்த அவர், மல்சிறிபுர ரெஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் காலத்தை கழித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
.jpg)