Our Feeds


Sunday, October 9, 2022

SHAHNI RAMEES

ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு


 இந்த நாட்களில் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில், ரயில்களில் பல கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.


இதேவேளை, ரயில் மோதியதால் ஸ்தம்பிதமடைந்திருந்த வடக்கு ரயில் வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.


காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற உத்தர தேவி நகரங்களுக்கு இடையேயான கடுகதி ரயில் நேற்று (08) தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு அருகில் தடம்புரண்டது.


இதன் காரணமாக நேற்று முதல் அனுராதபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்த ஒடிசி விசேட ரயிலை மஹவ பகுதியில் ரயில்வே அதிகாரிகள் நிறுத்த வேண்டியிருந்தது.


அதன்படி, அந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »