Our Feeds


Monday, October 3, 2022

SHAHNI RAMEES

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா..!



உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான

ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.


உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது.


ரஷ்யாவிற்கு வெளியிலும் அதன் இராணுவத்தையோ அல்லது உக்ரைனிய பிரதேசங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதையோ ஆதரிக்கும் அமைப்புகளையும் குறி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


ஐரோப்பிய ஆணையம் உருவாக்கப்பட்ட புதிய சுற்று தடைகள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட அதிகமான பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து தடை செய்யவும் ரஷ்ய இறக்குமதிகளுக்கு மேலும் தடை விதிக்கவும் முன்மொழிகிறது.


அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்று பிற நாடுகள், தன்னலக் குழுக்கள் என்று அழைக்கப்படுபவை உட்பட 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தடைகளை விதித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »