Our Feeds


Friday, October 14, 2022

ShortTalk

இடமாற்றம் செய்யப்படும் சிறிகொத்த ..!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தற்போது அமைந்துள்ள இடத்தில் சில புவியியல் சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம் ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »