நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
நாடாளுமன்றத்தில் முற்பகல் 11.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் வரவு -செலவுத் திட்ட சமர்ப்பிப்பு மற்றும் வரவு -செலவுத் திட்ட விவாதம் தொடர்பிலும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.