(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.