Our Feeds


Tuesday, October 11, 2022

SHAHNI RAMEES

BREAKING: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை..!




வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச

ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்திய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.


அதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும், அவர்களின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


அத்துடன், பிரதிவாதிகளான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, பின்னர் விசாரணையை நவம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »