Our Feeds


Wednesday, November 23, 2022

News Editor

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு


 

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய விலை 229 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 265 ரூபாவாக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 43 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் புதிய விலை 255 ரூபாவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »