விசேட பண்ட வரி (SCL) விகிதத்தை குறைக்க உணவுக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால், சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெங்காயத்திற்கான தேசியத் தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெற்றிக் தொன் மற்றும் இறக்குமதித் தேவையில் 86% பூர்த்தி செய்யப்படுகிறது. நாடு வெங்காயத் தேவையில் 14 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
நவம்பர் மூன்றாம் வாரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 290 – 390 ரூபாவாகவும், உள்ளூர் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 340 – 400 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.