Our Feeds


Saturday, November 12, 2022

RilmiFaleel

டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

தெற்கு பசுபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு பசுபிக்கில் உள்ள டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் நீருக்கடியில் 24.8 கிலோ மீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் டோங்கா தீவில் நீருக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »