Our Feeds


Monday, November 28, 2022

News Editor

#VIDEO: சஜித்திடம் டயனா விடுத்த கோரிக்கை


 

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரத் தொடங்கும் போது,

​​மீண்டும் கொழும்பில் இருந்து கண்டி வரை எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்வதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீண்டும் மக்களைத் தூண்டினால் எதிர்க்கட்சித் தலைவரை மக்கள் வீதியில் வைத்து அடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என டயானா கமகே தெரிவித்தார்.

மீண்டும் பேரணிக்கு தயாராகி மக்களைத் தூண்டிவிட்டு தமது இயலாமையைக் காட்ட முயற்சிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்று நாட்டின் சவாலை ஏற்றுக்கொண்ட போது, சஜித் மாத்திரமன்றி அவரது மனைவியும் கோடாபயவிடம் பிரதமர் பதவியை கோரியதாக, கோத்தபாய ராஜபக்ஷ தன்மிடம் கூறியதாக டயானா கமகே தெரிவித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »