Our Feeds


Tuesday, November 29, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்த பிரேசில்....

 

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் ஜி பிரிவில் மோதிய  பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில். 1-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி சமனில் இருந்தது.

இரண்டாவது பாதி போட்டியின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார்.

இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. போட்டி நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »