Our Feeds


Wednesday, December 14, 2022

ShortTalk

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - உங்கள் பிரதேச தகவலையும் அறிந்து கொள்ளுங்கள்!



சப்ரகமுவ  மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »