Our Feeds


Monday, December 26, 2022

ShortTalk

மீசாலையில் வீதியோரம் அவித்த சோளம் விற்றவருக்கு நீதிமன்றம் திறந்த பிடியாணை! - காரணம் இதுதான்



வீதியோரமாக சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.


யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபர், பாதுகாப்பற்ற தண்ணீரில் சோளத்தை ஊறவிட்டு விற்றமை, பாதுகாப்பு அங்கிகள் அணியாதமை, மருத்துவ சான்றிதழ் பெறாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து சுகாதார விதிமுறைகளை மீறி சோளம் விற்பனையில் ஈடுபட்டார் என மந்துவில் பொது சுகாதார பரிசோதகரால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.


குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , சோளம் விற்பனையில் ஈடுபட்டவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையால், அவருக்கு எதிராக மன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »