Our Feeds


Thursday, December 15, 2022

ShortTalk

இலங்கை விவசாய உற்பத்திக்கு ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கம் ஆதரவு.



இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான சந்தையை அமைப்பதற்கும், விவசாய உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கம் தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது.

ரஷ்ய கூட்டமைப்புக்கான இலங்கை தூதுவர் Levan. S. Dzhagarayan மற்றும் ரஷ்ய வர்த்தக ஆணையர் Alexandar. L. Rybas மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் இது தொடர்பான கலந்துரையாடலை நடத்தியதுடன் ரஷ்ய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Ms. Galina Kukuliva மற்றும் பொருளாதார துறை ஆலோசகர் Anastasia A. Grineva ஆகியோர் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு ரஷ்யாவிடம் இருந்து யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ரஷ்யாவில் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான சந்தையை உருவாக்குவது மற்றும் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு ரஷ்ய கூட்டமைப்பு பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »