Our Feeds


Sunday, December 11, 2022

News Editor

மீதொட்டமுல்ல வீடு ஒன்றில் கொள்ளை முயற்சி: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது!


 

பொலிஸ் சீருடை அணிந்த நிலையில் வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற நாடாளுமன்ற பிரிவு கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுவதற்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொண்டு சென்றிருந்தபோதே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »