Our Feeds


Monday, December 19, 2022

News Editor

மகன் நித்திரைக்கு செல்வில்லை என பொலிஸிற்கு அழைப்பு


 

மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் சிறுவனின் தாய் 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு புகார் தெரிவித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-

தம்புள்ள பொலிஸாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகவும் குடும்ப அங்கத்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தம்புள்ள பொலிஸார் இருவர் குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டைத் தேடிப்பிடித்துள்ளனர். வீடு மூடப்பட்டு அமைதியாகக்  காணப்பட்டுள்ளது.

பொலிஸார் அவர்களை எழுப்பி, 119 தலைபேசி இலக்கத்திற்கு  கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது வீட்டு எஜமானி பின்வருமாறு கூறியுள்ளார்.

இப்போது காலம் கடந்து விட்டதே,  நான் 7 மணிக்கு அல்லவா தொலைபேசி எடுத்தேன். தற்போது இரவு 9 மணி ஆகிவிட்டதே என்று கூறியுள்ளார்.  விடயம் புரியாத பொலிஸார்  மேலதிக தகவல்களை கேட்டுள்ளனர்.

அதன் போதுதான் பின்வரும் விடயம் தெரிய வந்துள்ளது. இரவு 7 மணிக்கு முன்பே பிள்ளைகளுக்கு உணவளித்து நித்திரைக்கு அனுப்புவதாகவும் ஆனால் 3ம் தரத்தில் கல்வி பயிலும் குறிப்பிட்ட ஒரு மகன் மட்டும் நித்திரை செய்யாது மற்றயவர்களுக்க இடையூறு செய்வதாகவும், எனவே அவரைப் பயமுறுத்தி நித்திரை செய்ய வைக்கவே பொலிஸாருக்க தகவல் தெரிவித்தாவும் கூறியுள்ளார். 

இதனைக் கேட் பொலிஸார் கோப மேலீட்டால் இப்படியான சிறிய விடயங்களுக்கு எங்களை அழைக்கக் கூடாது என்றும், இதனால் அரசுக்கு செலவு ஏற்படுவதாகவும்,  அத்துடன் தமது கடமைகளை செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்து கடும் எச்சரிக்கை செய்து, மீண்டும் பொலிஸ் நிலையம் திரும்பியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »