Our Feeds


Monday, December 12, 2022

ShortTalk

JUST_IN: பிரசன்ன மணி எக்சேஞ்ச் நிறுவனத்தின் நாணய மாற்று அனுமதிப்பத்திரம் ரத்து!




 - பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்தல்


2017ம் ஆண்டின் 12ம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11  (3)ம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இல.42A, முதலிகே மாவத்தை, கொழும்பு 01  மற்றும் இல.57, காலி வீதி கொழும்பு 06 என்ற முகவரிகளில் முறையே அதன் தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்ன மணி  எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் தற்காலிக  இடைநிறுத்தப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.


குறித்த நிறுவனம் மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில்  விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்)  லிமிடெட்டிற்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை  நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை  தீர்மானித்துள்ளது. 


அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஒருவராக பிரசன்ன மணி எக்சேஞ்ச்  (பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை எனவும், பிரசன்ன மணி எக்சேஞ்ச் (பிறைவேற்) லிமிடெட்டுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும்  பரிமாற்றம் செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும்  பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »