Our Feeds


Saturday, December 24, 2022

SHAHNI RAMEES

ஆஷு - நாய் விவகாரம்.. - நாய்க்கு ஆதரவாக களமிறங்கிய (PETA)....




ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில்

துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாPeople for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டு;ம் என பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச்  தெரிவித்துள்ளார்.




வுpலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.


இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில்  ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனி;ப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.


இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.


செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.


நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக இந்த விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »