Our Feeds


Thursday, January 26, 2023

News Editor

அரச வங்கியில் 20 மில்லியன் மதிப்பிலான நகைகள் மாயம்

 


மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபரொருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக, இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகு வைத்த நகைகளும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.


2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த அரச வங்கியின் முகாமையாளர் காணாமல் போன நகைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த முறைப்பாட்டில், நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கரின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவர் வசம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »