Our Feeds


Thursday, January 19, 2023

ShortTalk

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடைநிறுத்தப்படும் என்ற ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் விவாத  முடிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான   லக்ஷ்மன் கிரியெல்ல சட்டமூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக்  கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில், தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையிலேயே சட்டமூலம் 61மேலதிக வாக்குகளினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 91- பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

எதிரணி தரப்பில் சுயாதீன உறுப்பினர்களாக இருக்கும் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும்  ஜோன் செனவிரத்ன ஆகியோர் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மனோகணேசன், திகாம்பரம் ஆகியோரும் பங்கேற்கவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »