பூநகரி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (23) இரவு பெய்த மழையால், அறுவடை செய்து வீதியில் உலர வைத்திருந்த நெல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கால போக நெற் செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை உரிய விலையில் சந்தைப்படுத்த முடியாத நிலை தொடர்வதுடன், நெல் உலர விடும் தளங்கள் போதியளவு இல்லாத நிலையாலட பல்வேறு நெருக்கடிகளுக்கு விவசாயிகள் முகம்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, வீதிகளில் நெல்லை உலர விட்டிருந்த சமயம், மழை பெய்ததன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.